Monday, December 15, 2014

ஆப்பர் போடும் அலிபாபா இணையதளமும் இந்திய இணையதள தம்பிகளும்..:


சில நாட்களுக்கு  முன் இந்திய மின் வணிக நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற  சலுகை விற்பணையை அறிவித்தது  அது  வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்ப்பை  பெற்ற போதும் தோல்வி அடைந்தது.  ஆனால்  அரசு இந்த நிறுவனங்களை கண்காணிக்கும் என்று அமைச்சர்  அறிக்கைவிட்டார். மின் வணிகம் என்பது தொலைக்காட்சிகளில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.  இருந்த போதும் அந்த நிறுவனத்திற்க்கு எந்த லாபமும் இல்லாமல் அது  முடிந்தது. ஆனால்  சீனாவில் அலிபாபா  இணையதளம்  மிக சிறப்பாக சலுகை விற்பனையை செய்துள்ளது.
Alibaba
சீனாவில் முன்னணி மின் வணிக நிறுவனமான அலிபாபா செவ்வாய்க்கிழமை நடத்தியஒரு நாள் சலுகை விற்பனையில் 9,300 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் விற்பனைசெய்துள்ளது இந்நிறுவனம். ஆண்டுதோறும் நவம்பர் 11-ம் தேதியன்று மகத்தான தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்வதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
Tmall Reaches 163 Million Dollars Transaction Within 3 minute During Singles' Day Discounts
இந்த ஆண்டு இந்த சலுகை விற்பனையில்  மின் வணிக சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பையும் மீறி அதிக அளவுக்கு பொருட்களை விற்பனை செய்து சாதாரண வணிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதே  சலுகை விற்பனை கடந்த ஆண்டு நடந்த போது 580 கோடி  டாலருக்கு விற்பனை நடந்திருந்தது.
 இந்த ஆண்டும் அதே போன்ற  ஒரு அளவில் தான் விற்பனை  நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  விற்பனை  அளவு  அதைவிட பலமடங்கு அதிகமாகியுள்ளது.  மொத்தம் 27.80 கோடி பேர் இந்த விற்பனையில் பொருளட்களை வாங்க பதிவு செய்துள்ளனர்.  இவர்களில் 43 சதவீதம் பேர்  அலைபேசிகளையும் அது சார்ந்த பொருள்கள்வாங்குவதற்கு பணம் செலுத்தியவர்களாவர். கடந்த ஆண்டு இந்நிறுவனம் நடத்திய விற்பனையில் 15 கோடி பேர் பங்கேற்று பொருள்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.  ஒருநாள் வர்த்தகத்தில் 27,000 வர்த்தக நிறுவனங்கள் 220 நாடுகளில்தங்களுடைய தயாரிப்புகளை அலிபாபா மின் வணிகம் மூலம் விற்பனை செய்யதுள்ளன. சமீபத்தில்தான் இந்நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு அமெரிக்கர்கள் பங்கு முதலிடு செய்ய வலி வகுத்தது.
index
Snapdeal  விற்பனை 
இந்தியாவில் செயல்படும் மின் வணிக நிறுவனமான SnapDeal, செவ்வாய்க்கிழமை இதேபோன்று சலுகை விற்பனையை அறிவித்தது. செவ்வாய்க்கிழமை காலை 7மணிக்கு இந்நிறுவன விற்பனை தொடங்கியது. செல்போன், ஆயத்தஆடைகள், நுகர்வோர் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவில் தள்ளுபடி அளிக்கப்பட்டது.
snapdeal-11-11-offers-per-hour
ஆனால் இந்த நிறுவனத்தின்இணையதளம் விரைவிலேயே முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்திக்குள்ளாயினர். மின் வணிக நிறுவனங்கள் எப்படி இத்தகைய சலுகைகளை வழங்குகின்றன என ஏற்கணவே  நமது தளத்தில்  ஒரு  கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த வணிக நிறுவனங்களின் பொருட்களின் தரம் பற்றி மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
Thanks to : http://www.techtamil.com/

இணையத்தில் குறைந்த விலையில் விற்பதால் அமேசான் & பிளிப்கார்ட் எப்படி இலாபம் சம்பாரிக்கின்றன :


கடந்த வாரம் flipkart இளையதளம் “பிக் பில்லியன் டே” எனும் பெயரில் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யப் போவதாக பயங்கரமாக விளம்பரம் செய்தது.
0
தூங்காமல் நானும் காலை 8 மணிக்கு அவர்களின் windows phone apllication ஐ என் lumia 625 கைபேசியில் திறந்து வைத்து ஏதேனும் புதிய கைபேசி விலை குறைவாக வருகிறதா என பார்த்து கொண்டிருந்தேன்.
900 ரூபாய்க்கு lumia 520 கைபேசி விற்பனைனு இருந்துச்சு. ஆசம் ஆசம்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு வாங்கலாம்னு தொட்டேன் , உடனே ” sold out ” னு வந்துச்சு.
10353004_537245929752164_23536787209674903_n1-750x534
சரி லென்சு வச்ச slr கேமரா ஒன்று 32000 இல்லை வெறும் 17000 தான்னு ஒரு ஆப்பர் இருந்துச்சு, நாம தான் வெவரமான ஆளாச்சே! டபக்குனு snapdeal தளத்துக்கு தாவி அவனுக விலையை பார்த்தேன் , rs 14500 ” வாவ் வட் எ போட்டி !”
காசு கம்மின்னு கழுதை விட்டை கைநிறைய வாங்கக்கூடாது ! நமக்கு தேவைனா மட்டும் வாங்கனும்னு எங்க அப்பா சொல்லுவார் , அந்த கேமராவுல 3.5 mm ஒலி jack இல்லை , ” external audio output” கொடுக்க முடியாது. அதனால வாங்காம விட்டேன் , கொஞ்சம் நேரம் கழிச்சு பார்த்தா இரண்டு இடத்துலேயும் 18000 க்கு மேல விலைய ஏத்திவிட்டாணுக .
1412591594_Flipkartservererror
என்னுடைய lumia 625 உடைந்து நொருங்கியதால , புது 625 ஐ amazon தளத்துள rs 8999 க்கு சிறப்பு விலைக்கு வாங்கினேன் .
உலகம் பூராம் அதை rs 13000 க்கு கம்மியா எவனும் விக்கல , ஆனா ஒரு வியாபாரி மட்டும் அமேசான் தளத்துள rs 7999 to rs 8999 க்கு விலைய மாத்தி மாத்தி போட்டு வித்துகிட்டு இருந்தான் , அவன்கிட்ட வாங்குன நான் உட்பட பலருக்கும் 625 கைபேசியின் திரைல ஒரு ஓரத்துல கருப்பா மங்கலா இருந்திருக்கு , இந்த கடைக்காரன் திரைல பிரச்சனை இருக்கிற கைபேசியை ஆப்பர் விலைக்கு வித்துகிட்டு இருக்கான்.
Flipkart-Meme1
amazon/flipkart இரண்டு பேரும் 1000 கோடி ருபாய் 2000 கோடி ருபாய் புதிய முதலீடுகள் மூலம் இந்தியாவின் இணைய விற்பனை சந்தையை கைப்பற்ற முயன்று வருகிறார்கள் .
இவர்கள் தொலைகாட்சி விளம்பரங்களுக்கு பணம் ஒதுக்குவது போல ஒரு சில கோடி ரூபாய்களை தங்களின் “போலி சலுகை ” விற்பனைக்கு பயன் படுத்திகிறார்கள்.
அதாவது ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூ 10,000 க்கு இவர்கள் தளத்தில் விற்பனை செய்கிறார் என்றால் 5% முதல் 15% கட்டணமாக இந்த தளங்களுக்கு அந்த வியாபாரி காட்ட வேண்டும், விற்பனை விலை 10,000 என அவர் நிர்ணயம் செய்தாலும் இந்த தளம் 7000 ருபாய் என விற்பனை செய்யும் , இதனால் இவர்களுடைய 5 % கட்டண வருமானமும் போகும் , மேலும் நட்டத்தை தாங்களாகவே ஏற்ப்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் showroon , dealer கள் பெரும் கடுப்பில் இருக்கிறார்கள் , தங்களிடம் கோடிகளில் பணம் இருக்கிறது என்பதற்காக விற்பனை விலையை விட குறைந்து விற்றால் , இனி யாரும் இவர்களுக்கு பொருட்களை அனுப்பக்கூடாது என பல டீலேர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளார்கள்.
Amazon-Diwali-Dhamaka-Week
நட்டத்துக்கு வித்தாலும் பல நேரங்களில் நல்ல பொருள் நமக்கு கிடைக்க மாட்டிகுது , சிலருக்கு flipkart தளத்துல நிமிசத்துக்கு ஒரு முறை விலைய ஏத்தி ஏத்தி பிக் பில்லியன் டே ல ஏமாத்தியிருக்கிறார்கள்.
முதல் நாள் விலையா கூட்டி வச்சு “BBD” ல முந்தய நாளோட அதே விலைக்கு சில பொருட்களை வித்ததாக சிலர் கண்டு பிடிச்சிருக்காங்க,
இவனுங்க கிட்ட கோடிக்கனக்கான பணம் இருப்பதா தெரிஞ்சுகிட்ட அரசு வான்டடா வந்து “மக்களின் நலன் கருதி “விசாரிக்க போகுதாம் ?
ஆகவே ஆப்பர் ஆப்பர்னு கண்டதையும் வாங்காமல் விழிப்புடன் இருப்போம்!!
Thanks to : http://www.techtamil.com/

முகநூலை தூக்கி எறியுங்கள், விக்கிப்பீடியாவில் எழுதுங்கள்.


wikipediatamil
முகநூல் பல புதிய தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது.  இலக்கிய நடையில் எழுதினால் தான் ஒருவர் எழுத்தாளர் என்பதையும் தாண்டி மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக எழுதுவோர் அனைவரும் எழுத்தாளரே  எனும் சூழ்நிலை உள்ளது.
நிகழ்காலத்தில் அனைவருக்கும் பொதுவான அறிவுக் களஞ்சியமாக விளங்கும் நமது Wikipediaவில் உலகில் உள்ள பலரும் தத்தம் மொழியில் கட்டுரைகளை எழுதி வருகின்றார்கள்.
அதிக கட்டுரைகள் அடிப்படையில்.,
ஆங்கிலம், பிரஞ்சு, டச்சு மொழிகள் முதல் இடத்திலும்.
ஹிந்தி , சீனம், அரபி போன்ற மொழிகள் இரண்டாம் இடத்திலும்,
மலையாளம், மணிப்பூரி, கன்னடா, தமிழ் என நான்காம் இடத்திலும் மொழிகள் உள்ளன.
தமிழில் எழுதும் அன்பர்களை பாராட்டும் விதத்தில் ஒரு போட்டியும் நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதிக கட்டுரை எழுதும் அன்பரின் பெயர் மற்றும் புகைப்படம் தமிழ் விக்கி முதல் பக்கத்தில் இடம் பெரும்.
ஏற்கனவே உள்ள கட்டுரையை மேம்படுத்தலாம் அல்லது புதிய தலைப்பிலும் எழுதலாம். முகநூல் தளத்தில் தினமும் மணிக்கணக்கில் நேரம் செலவழிக்கும் நாம், ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு மணிநேரம் ஒதுக்கினால் ஒரு கட்டுரையை எழுதிவிட முடியும். நாம் அனைவரும் மாதத்திற்கு ஒரு கட்டுரையாவது Wikipediaவில் எழுத வேண்டும் என முடிவு செய்து எழுதுவோம் இணைந்து தமிழ் வளர்ப்போம்.
Thanks to : http://www.techtamil.com/editor-pages/tamil-wikipedia-article-writing-contest-2013/

கூகல் தேடுபொறிக்கு அறிவு வளர்ந்துள்ளது!




நமது அன்றாட இணைய பணிகளில் தேடுபொறிகளின் பங்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் முதலிடத்தில் இருக்கும் கூகல் எவ்வாறு படங்களை தேடுகிறது, ஒரு பட கோப்பை எப்படி வார்த்தைகளால் விளக்குகிறது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
நீங்கள் ஒரு மன்னர் ஒருவரின் படத்தை பார்த்தால் உங்களுக்கு என்னென்ன தோன்றும்?
1. ஒரு ஆண்
2. ஒருவர்
3. நின்றுகொண்டு இருக்கிறார்
4. அரசர்
அதே போல்., ஒரு ராணியின் படம் என்றால்.,
1. ஒரு பெண்
2. ..
3. ..
Google caption
என  அவர் மன்னர் என்பதை தாண்டி அந்த படத்தின் பொது காரணிகள் “ஒரு ஆண்” என்பது அனைத்து மொழிகளிலும்  ஆண் என்பது தான்.
இது போல ஒவ்வொரு படத்தில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் உள்ள பொது பெயர்களை கணிதத்தில் வெக்டார் (Vector Space Maths) (திசை வெளி/கோட்டுக் கணிதம்) கோட்டில் வரிசையாக அடுக்கி.,  எந்தெந்த சொற்கள் இந்த சொல்லுக்கு அடுத்து அதிகமாக வருகிறது என்பதையும் தொடர்புபடுத்தி, ஒரு படத்தை வார்த்தைகளால் விளக்கும் முறையை கடந்த ஆண்டுகளில் படிப்படியாக கூகல் தேடுபொறியில் பொறியாளர்கள் ஏற்படுத்தி வந்துள்ளனர்.
Translation அதாவது மொழியாக்கம் / மொழிபெயர்த்தல் செய்வது என்பது  ஒவ்வொரு சொல்லாக ஒரு மொழியில் இருந்து அடுத்த மொழிக்கு மாற்றி., பின்னர் வாக்கியம் அமைத்தல் என படிப்படியாக செறிவடையும் ஒரு செயல்முறை.
அனால்., கூகள் தேடுபொறி இப்பொது ஒரு பட கோப்பில் என்ன உள்ளது என்பதை ஆங்கிலத்திலும், தமிழிலும் இன்ன பிற மொழிகளிலும் எழுதி விளக்கும் வண்ணம் வளர்ந்துள்ளது.  இதன் திறனை மதிப்பீடு செய்ததில்  சிறந்த மனிதன் 69 மதிப்பெண் பெற்றால் இது 59 மதிப்பெண் பெறுகிறது. விரைவில் மனிதனின் திறனை விட அதிகமாகும் வாய்ப்புள்ளது. ​
IBM நிறுவனத்தின் வாட்சன் எனும் கணினி இப்படிதான் பல திறன்களுடன் உருவாக்கப்பட்டது. இபொழுது வாட்சனின் திறனை வைத்து பலரும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பல மென்பொருள்களை சமூக நலனுக்காகவும், நிறுவனமாகவும் உருவாக்கி வருகின்றனர். ஒரே ஒரு வாட்சன் செர்வர் அனைத்தையும் செய்யும்.
கூகள் என்னதான் திறனாக இருந்தாலும் அதன் இறுதி பயன் வெறும் விளம்பரம் காட்டுதல் என முடங்கி விடும். ஏற்கனவே உலகின் பல திறமைசாலிகள் வேலை வெட்டி இல்லாமல் முடங்கி இருக்கும் இடமாக கூகல் அலுவலகங்கள் உள்ளன. 85% கூகல் ஊழியர்களுக்கு சவாலான வேலை எதுவும் இல்லை. அதிக பட்சம் Youtube Comments Moderation செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்த வேலை பார்ப்பவர் அண்ணா பலகலைகழகத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றவராக இருப்பார்.






Thanks to : http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/google-image-caption/

Saturday, December 13, 2014

தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு. (மக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது)

தஞ்சை மராட்டியர் வரலாறு

ஆக்கியோன் தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007.  தொலைபேசி எண். 9486741885 மின்னஞ்சல்: privarsh@gmail.com தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு. (மக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது) முதல் பகுதி.



தஞ்சை சோழ மன்னர்கள் ஆண்ட பிரதேசமல்லவா? அங்கு நாயக்க மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து மராட்டிய மன்னர்களும் எப்படி வந்தார்கள்? இவைகள் பற்றியெல்லாம் ஆய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் "தஞ்சையை ஆண்ட நாயக்கர் வரலாறு" எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டார்கள். இது குறித்து மக்கன்சி சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப் படுகின்றன. அதன் அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வரலாறு குறித்து http://bharathipayilagam.blogspot.in/2011/09/blog-post_20.html மேற்கண்ட தளத்தில் சென்று பார்க்கலாம்....