Monday, December 15, 2014

இணையத்தில் குறைந்த விலையில் விற்பதால் அமேசான் & பிளிப்கார்ட் எப்படி இலாபம் சம்பாரிக்கின்றன :


கடந்த வாரம் flipkart இளையதளம் “பிக் பில்லியன் டே” எனும் பெயரில் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யப் போவதாக பயங்கரமாக விளம்பரம் செய்தது.
0
தூங்காமல் நானும் காலை 8 மணிக்கு அவர்களின் windows phone apllication ஐ என் lumia 625 கைபேசியில் திறந்து வைத்து ஏதேனும் புதிய கைபேசி விலை குறைவாக வருகிறதா என பார்த்து கொண்டிருந்தேன்.
900 ரூபாய்க்கு lumia 520 கைபேசி விற்பனைனு இருந்துச்சு. ஆசம் ஆசம்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு வாங்கலாம்னு தொட்டேன் , உடனே ” sold out ” னு வந்துச்சு.
10353004_537245929752164_23536787209674903_n1-750x534
சரி லென்சு வச்ச slr கேமரா ஒன்று 32000 இல்லை வெறும் 17000 தான்னு ஒரு ஆப்பர் இருந்துச்சு, நாம தான் வெவரமான ஆளாச்சே! டபக்குனு snapdeal தளத்துக்கு தாவி அவனுக விலையை பார்த்தேன் , rs 14500 ” வாவ் வட் எ போட்டி !”
காசு கம்மின்னு கழுதை விட்டை கைநிறைய வாங்கக்கூடாது ! நமக்கு தேவைனா மட்டும் வாங்கனும்னு எங்க அப்பா சொல்லுவார் , அந்த கேமராவுல 3.5 mm ஒலி jack இல்லை , ” external audio output” கொடுக்க முடியாது. அதனால வாங்காம விட்டேன் , கொஞ்சம் நேரம் கழிச்சு பார்த்தா இரண்டு இடத்துலேயும் 18000 க்கு மேல விலைய ஏத்திவிட்டாணுக .
1412591594_Flipkartservererror
என்னுடைய lumia 625 உடைந்து நொருங்கியதால , புது 625 ஐ amazon தளத்துள rs 8999 க்கு சிறப்பு விலைக்கு வாங்கினேன் .
உலகம் பூராம் அதை rs 13000 க்கு கம்மியா எவனும் விக்கல , ஆனா ஒரு வியாபாரி மட்டும் அமேசான் தளத்துள rs 7999 to rs 8999 க்கு விலைய மாத்தி மாத்தி போட்டு வித்துகிட்டு இருந்தான் , அவன்கிட்ட வாங்குன நான் உட்பட பலருக்கும் 625 கைபேசியின் திரைல ஒரு ஓரத்துல கருப்பா மங்கலா இருந்திருக்கு , இந்த கடைக்காரன் திரைல பிரச்சனை இருக்கிற கைபேசியை ஆப்பர் விலைக்கு வித்துகிட்டு இருக்கான்.
Flipkart-Meme1
amazon/flipkart இரண்டு பேரும் 1000 கோடி ருபாய் 2000 கோடி ருபாய் புதிய முதலீடுகள் மூலம் இந்தியாவின் இணைய விற்பனை சந்தையை கைப்பற்ற முயன்று வருகிறார்கள் .
இவர்கள் தொலைகாட்சி விளம்பரங்களுக்கு பணம் ஒதுக்குவது போல ஒரு சில கோடி ரூபாய்களை தங்களின் “போலி சலுகை ” விற்பனைக்கு பயன் படுத்திகிறார்கள்.
அதாவது ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூ 10,000 க்கு இவர்கள் தளத்தில் விற்பனை செய்கிறார் என்றால் 5% முதல் 15% கட்டணமாக இந்த தளங்களுக்கு அந்த வியாபாரி காட்ட வேண்டும், விற்பனை விலை 10,000 என அவர் நிர்ணயம் செய்தாலும் இந்த தளம் 7000 ருபாய் என விற்பனை செய்யும் , இதனால் இவர்களுடைய 5 % கட்டண வருமானமும் போகும் , மேலும் நட்டத்தை தாங்களாகவே ஏற்ப்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் showroon , dealer கள் பெரும் கடுப்பில் இருக்கிறார்கள் , தங்களிடம் கோடிகளில் பணம் இருக்கிறது என்பதற்காக விற்பனை விலையை விட குறைந்து விற்றால் , இனி யாரும் இவர்களுக்கு பொருட்களை அனுப்பக்கூடாது என பல டீலேர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளார்கள்.
Amazon-Diwali-Dhamaka-Week
நட்டத்துக்கு வித்தாலும் பல நேரங்களில் நல்ல பொருள் நமக்கு கிடைக்க மாட்டிகுது , சிலருக்கு flipkart தளத்துல நிமிசத்துக்கு ஒரு முறை விலைய ஏத்தி ஏத்தி பிக் பில்லியன் டே ல ஏமாத்தியிருக்கிறார்கள்.
முதல் நாள் விலையா கூட்டி வச்சு “BBD” ல முந்தய நாளோட அதே விலைக்கு சில பொருட்களை வித்ததாக சிலர் கண்டு பிடிச்சிருக்காங்க,
இவனுங்க கிட்ட கோடிக்கனக்கான பணம் இருப்பதா தெரிஞ்சுகிட்ட அரசு வான்டடா வந்து “மக்களின் நலன் கருதி “விசாரிக்க போகுதாம் ?
ஆகவே ஆப்பர் ஆப்பர்னு கண்டதையும் வாங்காமல் விழிப்புடன் இருப்போம்!!
Thanks to : http://www.techtamil.com/

No comments:

Post a Comment