Monday, November 30, 2015

வேலன்-அடோப் ரீடர் தானே படித்து காட்ட


அடோப் ரீடர் தானே படித்து காட்ட


நாம் பெரும்பாலானவர்கள் பி.டி.எப். பைல்களை

அடோப் ரீடர் மூலம் திறந்து பார்ப்போம். ஆனால் 

அந்த அடோப் ரீடரிலேயே படிக்கும் வசதி இருப்பது

பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நம்மிடம்

உள்ள கட்டுரைகள், பாடங்கள், டாக்குமென்டுகள் என

பி.டி.எப். பைல்களாக எது எது உள்ளனவோ அது

அனைத்தையும் அடோப் ரீடர் படித்துக்காட்டும்.

பள்ளி , கல்லூரி படிக்கும் மாணவர்கள் இந்த

வசதியை பயன் படுத்துவது மூலம் பாடங்கள் 

எளிதில் மனப்பாடம் ஆகும்.தூய தமிழில் பேசுவது

போல் தூய ஆங்கிலத்தில் அடோப் ரீடர் பேசுவதை

நாம் கேட்கலாம். இனிஇந்த வசதியை எப்படி

பயன்படுத்துவது என பார்க்கலாம்.

முதலில் நீங்கள் படித்துக்காட்டவேண்டிய

பைலை ஓப்பன் செய்துக்கொள்ளவும். பிறகு

அதில் view எனும் காலத்தை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட வாறு ஒரு காலம் 

தோன்றும்.

அந்த காலத்தில் கடைசியில் உள்ள Read Out Loud

ஐ செலக்ட் செய்யவும். பின்னர் வரும் உப காலத்தில்

Activate Read Out Loud  அல்லது Shift+Ctrl+Y அழுத்தவும்.

இப்போழுது உங்களுக்கு கீழ்கண்ட வாறு காலம் 

மீண்டும் திறக்கும்.



அதில் நீங்கள் தேர்வு செய்த பக்கம் மட்டும் படித்துக்

காட்ட வேண்டுமா அல்லது மொத்த பக்கங்களையும்

படித்து காட்ட வேண்டுமா என உங்கள் விருப்பத்திற்கு

ஏற்ற வாறு தேர்வு செய்யுங்கள்.



தேர்வு செய்து முடித்ததும் அடோப்ரீடர் உங்களுக்கு 

நீங்கள் தேர்வு செய்த பக்கத்தை படித்துக்காட்ட

ஆரம்பிக்கும். படிப்பதை தற்காலிகமாகநிறுத்தவோ

 அல்லது நிறந்தராமாக நிறுத்தவோ முடியும்.


அடோப் ரீடர் இருந்தும் அதில் இந்த வசதி பற்றி

தெரியாதவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
 
thanks to: ..velan.bloger.com

No comments:

Post a Comment