Thursday, August 28, 2014

யூடியூப் வீடியோக்களை விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க

யூடியூப் வீடியோக்களை விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வழி

வீடியோக்களை பார்த்து ரசிப்பது என்று வரும் போது யூடியூப் பெஸ்ட் . ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிக்கும் போது , பக்கவாட்டில் விளம்பரங்களை பொறுத்துக்கொண்டாக வேண்டும். இத்தைகைய விளம்பர இடையூறுகள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க வழி செய்யும் இணையதளங்களும் இல்லாமல் இல்லை. வியுபியூர் சேவையும் இந்த ரகத்தை சேர்ந்தது தான்.
யூடியூப் வீடியோக்களை சுத்தமாக்கி தருவதாக இந்த இணையதளம் சொல்கிறது. அதாவது யூடியூபி வீடியோ தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பக்கவாட்டில் தோன்றக்கூடிய தொடர்புடைய வீடியோ பரிந்துரை மற்றும் பின்னூட்டங்கள் போன்ற இடையூறுகள் இல்லாமல் தேர்வு செய்த விடியோவை மட்டும் பார்க்கலாம். இதற்காக பார்க்க விரும்பும் யூடியூப் வீடியோ இணைப்பை மட்டும் இந்த தளத்தில் சமர்பித்தால் போதும் விளம்பரம் போன்றவற்றை நீக்கி சுத்தமாக்கி விடுகிறது.
வழக்கமான யூடியூப்பில் பார்ப்பதற்கும் வியுபியூர் சேவையில் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை முகப்பு பக்கத்திலேயே காட்சி வீடியோவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான புக்மார்கிங் வசதியும் உள்ளது. அதன் மூலம் நேரடியாக யூடியூப் தளத்திலேயே இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வீடியோ பிரியர்களுக்கு சரியான சேவை இது. ஆனால் சில வீடியோக்களில் இந்த தூய்மை படுத்தலையும் மீறி விளம்பரங்கள் எட்டிப்பார்க்கலாம். அவற்றை பொறுத்துக்கொள்வதைவிட வேறு வழியில்லை. பயன்படுத்தி பார்த்து சொல்லுங்கள்.
இணைய முகவரி; http://viewpure.com/

thanks to : http://cybersimman.wordpress.com/

Sunday, August 24, 2014

தமிழக அரசின் பொது நிறுவனங்களின் பட்டியல்:

தமிழக அரசின் பொது நிறுவனங்களின் பட்டியல்:


வரிசை பொது நிறுவனங்களின் பெயர்கள்.
எண்.
சட்டப்படிக்கான கழகங்கள்

1. தமிழ்நாடு மின்சார வாரியம் (வரையறுக்கப்பட்டது)
2. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்
3. தமிழ்நாடு பண்டகசாலை வாரியம்
4. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
5. தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்
6. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
7. தமிழ்நாடு பூதான இயக்க வாரியம்
8. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
9. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
10. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்
கழிவுநீரகற்று வாரியம்.
11. தமிழ்நாடு கடல்சார் வாரியம்
பிற பொது நிறுவனங்கள்
1. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
2. தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
3. தமிழ்நாடு சிறு தொழில் கழகம் (வரையறுக்கப்பட்டது)
4. தமி ழ் ந £டு சிறு தெ £ழில் வள ர் ச் சிக் க ழ க ம்
(வரையறுக்கப்பட்டது)
5. தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
6. தமிழ்நாடு சரிகை நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
7. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
8. தமி ழ் ந £டு நு க ர்ª ப £ருள் வ £ணி பக் க ழ க ம்122 123
(வரையறுக்கப்பட்டது)
9. தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
10. தமிழ்நாடு பால்வள நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
11. தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
12. தமிழ்நாடு வேளாண்மைத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
13. தமிழ்நாடு கோழிப் பண்ணைகள் வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
14. தமிழ்நாடு மாநில பண்ணைகள் கழகம் (வரையறுக்கப்பட்டது)
15. தமிழ்நாடு மீனள வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
16. தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
17. தமிழ்நாடு பீங்கான் நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
18. தமிழ்நாடு கைத்திறப் பொருள் வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
19. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
20. பூம் புக £ ர் க ப் பல் « ப £க்குவ ரத்துக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
21. போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
22. தமிழ்நாடு உப்பு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
23. தமிழ்நாடு சர்க்கரை நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
24. தமி ழ் ந £டு ª ப £ருள் « ப £க்குவ ரத்துக் க ழ க ம்
(வரையறுக்கப்பட்டது)
25. தமிழ்நாடு தேயிலைத் தோட்ட நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
26. தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
27. தமிழ்நாடு கனிம நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
28. தமிழ்நாடு சிமெண்ட் தொழில் நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)
29. தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)
30. பெரம்பலூர் சர்க்கரை ஆலை (வரையறுக்கப்பட்டது)
31. தமிழ்நாடு மாநில பொறியியல் மற்றும் பணியியல் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
32. வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
33. தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
34. தமிழ்நாடு மாநில கட்டுமான நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
35. தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட்
36. தமிழ் ந £டு க £வல ர் வீட்டு வ சதிக் க ழ க ம்
(வரையறுக்கப்பட்டது)
37. தமிழ்நாடு மாநில ஆழ்துளைக் கிணறுகள் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
38. தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
39. தமிழ்நாடு தோல் வளர்ச்சி நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
40. சதர்ன் வடிவமைப்புகள் நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
41. தமி ழ் ந £டு ª பண் கள் நல வள ர் ச் சிக் க ழ க ம்
(வரையறுக்கப்பட்டது)
42. தமிழ்நாடு சீட்டுக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
43. தமிழ்நாடு எஃகு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
44. பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு
(வரையறுக்கப்பட்டது)
45. தமிழ்நாடு மருந்துச் செடிப் பண்ணைகள் மற்றும் மூலிகை
மருந்துகள் கழகம் (வரையறுக்கப்பட்டது)
46. அரசு இரப்பர் கழகம் (வரையறுக்கப்பட்டது)
47. தமிழ்நாடு தொழிலியல் வெடி மருந்து நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)124 125
48. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார
மேம்பாட்டுக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
49. தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
50. தமிழ்நாடு வர்ணம் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள்
நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
51. தமிழ்நாடு மக்னீசியம் மற்றும் அதைச் சார்ந்த
பொருட்கள் நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
52. தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்ளமைப்பு வளர்ச்சிக்
கழகம் (வரையறுக்கப்பட்டது)
53. தமிழ்நாடு மின்சக்தி நிதி மற்றும் அடிப்படை வசதிகள்
வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
54. தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
55. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்
கழகம் (வரையறுக்கப்பட்டது)
56. தமிழ்நாடு கிராபைட் கழகம் (வரையறுக்கப்பட்டது)
57. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்
(தமிழ்நாடு) (வரையறுக்கப்பட்டது)
58. மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை )
(வரையறுக்கப்பட்டது)
59. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்)
(வரையறுக்கப்பட்டது)
60. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்)
(வரையறுக்கப்பட்டது)
61. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்)
(வரையறுக்கப்பட்டது)
62. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்)
(வரையறுக்கப்பட்டது)
63. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை)
(வரையறுக்கப்பட்டது

இதர நிறுவனங்கள்

1. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)
2. அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)

Photo: தமிழக் அரசின் பொது நிறுவனங்களின் பட்டியல்

வரிசை பொது நிறுவனங்களின் பெயர்கள்.
எண்.
சட்டப்படிக்கான கழகங்கள்
1. தமிழ்நாடு மின்சார வாரியம் (வரையறுக்கப்பட்டது)
2. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்
3. தமிழ்நாடு பண்டகசாலை வாரியம்
4. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
5. தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்
6. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
7. தமிழ்நாடு பூதான இயக்க வாரியம்
8. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
9. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
10. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்
கழிவுநீரகற்று வாரியம்.
11. தமிழ்நாடு கடல்சார் வாரியம்
பிற பொது நிறுவனங்கள்
1. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
2. தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
3. தமிழ்நாடு சிறு தொழில் கழகம் (வரையறுக்கப்பட்டது)
4. தமி ழ் ந £டு சிறு தெ £ழில் வள ர் ச் சிக் க ழ க ம்
(வரையறுக்கப்பட்டது)
5. தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
6. தமிழ்நாடு சரிகை நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
7. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
8. தமி ழ் ந £டு நு க ர்ª ப £ருள் வ £ணி பக் க ழ க ம்122 123
(வரையறுக்கப்பட்டது)
9. தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
10. தமிழ்நாடு பால்வள நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
11. தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
12. தமிழ்நாடு வேளாண்மைத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
13. தமிழ்நாடு கோழிப் பண்ணைகள் வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
14. தமிழ்நாடு மாநில பண்ணைகள் கழகம் (வரையறுக்கப்பட்டது)
15. தமிழ்நாடு மீனள வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
16. தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
17. தமிழ்நாடு பீங்கான் நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
18. தமிழ்நாடு கைத்திறப் பொருள் வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
19. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வளர்ச்சிக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
20. பூம் புக £ ர் க ப் பல் « ப £க்குவ ரத்துக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
21. போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
22. தமிழ்நாடு உப்பு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
23. தமிழ்நாடு சர்க்கரை நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
24. தமி ழ் ந £டு ª ப £ருள் « ப £க்குவ ரத்துக் க ழ க ம்
(வரையறுக்கப்பட்டது)
25. தமிழ்நாடு தேயிலைத் தோட்ட நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
26. தருமபுரி மாவட்ட வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
27. தமிழ்நாடு கனிம நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
28. தமிழ்நாடு சிமெண்ட் தொழில் நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)
29. தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)
30. பெரம்பலூர் சர்க்கரை ஆலை (வரையறுக்கப்பட்டது)
31. தமிழ்நாடு மாநில பொறியியல் மற்றும் பணியியல் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
32. வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
33. தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
34. தமிழ்நாடு மாநில கட்டுமான நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
35. தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட்
36. தமிழ் ந £டு க £வல ர் வீட்டு வ சதிக் க ழ க ம்
(வரையறுக்கப்பட்டது)
37. தமிழ்நாடு மாநில ஆழ்துளைக் கிணறுகள் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
38. தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
39. தமிழ்நாடு தோல் வளர்ச்சி நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
40. சதர்ன் வடிவமைப்புகள் நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
41. தமி ழ் ந £டு ª பண் கள் நல வள ர் ச் சிக் க ழ க ம்
(வரையறுக்கப்பட்டது)
42. தமிழ்நாடு சீட்டுக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
43. தமிழ்நாடு எஃகு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
44. பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு
(வரையறுக்கப்பட்டது)
45. தமிழ்நாடு மருந்துச் செடிப் பண்ணைகள் மற்றும் மூலிகை
மருந்துகள் கழகம் (வரையறுக்கப்பட்டது)
46. அரசு இரப்பர் கழகம் (வரையறுக்கப்பட்டது)
47. தமிழ்நாடு தொழிலியல் வெடி மருந்து நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)124 125
48. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார
மேம்பாட்டுக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
49. தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
50. தமிழ்நாடு வர்ணம் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள்
நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
51. தமிழ்நாடு மக்னீசியம் மற்றும் அதைச் சார்ந்த
பொருட்கள் நிறுவனம் (வரையறுக்கப்பட்டது)
52. தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்ளமைப்பு வளர்ச்சிக்
கழகம் (வரையறுக்கப்பட்டது)
53. தமிழ்நாடு மின்சக்தி நிதி மற்றும் அடிப்படை வசதிகள்
வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
54. தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம்
(வரையறுக்கப்பட்டது)
55. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்
கழகம் (வரையறுக்கப்பட்டது)
56. தமிழ்நாடு கிராபைட் கழகம் (வரையறுக்கப்பட்டது)
57. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்
(தமிழ்நாடு) (வரையறுக்கப்பட்டது)
58. மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை )
(வரையறுக்கப்பட்டது)
59. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்)
(வரையறுக்கப்பட்டது)
60. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்)
(வரையறுக்கப்பட்டது)
61. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்)
(வரையறுக்கப்பட்டது)
62. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்)
(வரையறுக்கப்பட்டது)
63. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை)
(வரையறுக்கப்பட்டது

இதர நிறுவனங்கள்

1. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)
2. அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம்
(வரையறுக்கப்பட்டது)

Friday, August 22, 2014

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
1. இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.
2. மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
3. ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4. டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
5. பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
6. பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7. கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
8. டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9. மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
10. பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
11. கிரெடிட் கார்டு!
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
நன்றி : www.sindinga.com


From Group RTI Act/public grievances தகவல் அறியும் உரிமை சட்டம்/மக்கள் புகார் பெட்டி
தெரிந்து கொள்வோம் "தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” 

சட்டம் எதற்கு?

அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

என்ன தகவல் பெறலாம்?
அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.

எடுத்துக்காட்டாக,

1. நமது மாவட்ட எம்.பி. அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி எம்.எல்.ஏ. அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

எவ்வாறு பெறுவது?
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.
மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
 மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும்
தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.
 நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது. 

கட்டணம் விவரம்:
மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாரிடம் தகவல் கேட்பது?
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல் www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.

தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.

மேல் முறையீடு:
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.

மாநில தலைமை தகவல் ஆணையர்,

காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம்முதல் மாடி,

(
வானவில் அருகில்) பழைய எண்: 273, புதிய எண்: 378, அண்ணா சாலை, (தபால் பெட்டி எண்: 6405) தேனாம்பேட்டைசென்னை - 600 018

தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.

விதி விலக்குகள் :
பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம். நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம். ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம். உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம். டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.

தகவல் கேட்பவரை மிரட்டினால் என்ன செய்வது?
தகவல் கேட்பவரை மிரட்டுவது சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக காவல் துறையினரிடம் தகவல் கேட்கையில் இது போல் நிகழும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், எந்த தகவலை கேட்கையில் மிரட்டல் வந்ததோ, அதே தகவலை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து நண்பர்களையோ உறவினர்களையோ, அதே தகவலை கேட்டு பல விண்ணப்பங்களை அனுப்பச் செய்யுங்கள். இது மிரட்டலை நிச்சயம் நிறுத்தும். இதையும் மீறி மிரட்டல் தொடர்ந்தால் வழக்கறிஞர்களை அணுகவும்.

இதற்கான இணையதளங்கள்:
http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org
   இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.



Thanks to:  httpwwwsindingacom