Friday, December 2, 2011
சவுதி அரேபிய - ரியாத் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் கொலை
செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இலங்கைப் பெண் ஒருவரின் சடலத்தை
தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, May 25, 2010
இவற்றால் உயிர் பிழைக்கலாம் என்றில்லை . உயிர் பிழைக்கும் விகிதத்தை கூட்டலாம்.
உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் . அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை . இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் . இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர் பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம். எவளவு பெரிய விபத்தானாலும் ஒரு விமானம் முழுமையாக தீப்பிடித்து வெடித்து எரிவதற்கு 90 செக்கன்கள் ( 1 1/2 நிமிடங்கள் ) ஆகும். இது சர்வதேச தீ விபத்து பாதுகாப்பு மையத்தின் ஆய்வு அறிக்கை கூறும் தகவல் . அந்த 90 செக்கன்களையும் நாம் பயனுள்ள விதத்தில் பாவிப்பதிலேயே உயிர் பிழைக்கும் சந்தர்ப்பம் உண்டு . நடை பெற்ற விபத்தில் இருந்து பிழைத்த உமர் பாரூக் கூறிய கருத்தின் படி பார்த்தால் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் . சில உயிர்கள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் ஏன் மற்றயவர்களால் எழுந்து வரமுடியவில்லை ?? "திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லாரும் அலறினோம்.சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத்துடன் விமானம் மோதியது. விமானம் முழுக்க தீ பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது."தைரியத்தை வர வழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உள்பட விமானத்தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது." I got caught in some cables but managed to scramble out தான் இடையில் மாட்டிக்கொண்டதாக கூறியிருந்தார் உமர் . விமானம் எரிந்து தீப்பற்ற முதலே சிலரது உயிர்கள் பதற்றத்தால் செல்லும் வாய்ப்பு அதிகம் . மற்றும் பொருள்கள் ஏதாவது எதிர்பாராத விதமாக அடிபடும் . முக்கியமாக தலைப்பகுதியே முதலில் தாக்கப்படும் . தலைப்பகுதி அடிபடுவதால் சிலர் முதலே மயக்கமடைவர் . தலைப்பகுதியை முன்னாள் இருக்கும் இருக்கையில் வைத்து படுக்க வேண்டும் . இதனால் முதல் சந்தர்ப்பத்தில் இருந்து பிழைக்கலாம் . என் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பலரால் எழுந்து ஓடி வந்திருக்க முடியும் ஆனால் நெருப்பு எரிந்ததால் வந்த புகை அவர்கள் மயக்கத்திற்கு காரணம் . வரும் நெருப்பு புகை மேலாக தான் கூடுதலாக செல்லும். குறைவாக சுவாசிப்பதன் மூலமும் கீழே குனிந்து கொண்டு வெளியேறுவதன் மூலமும் அந்த மயக்கத்தை தவிர்க்கலாம் .இல்லாவிட்டால் ஈரமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளவும்
இந்த செயன்முறை உயிர் பிழைக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் .
"நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது." ஏன் அவரால் விரைவாக வெளியேறும் பகுதியை திறக்கம் முடியவில்லை? அவர் இருந்த இருக்கைக்கு அருகாமையில் தான் வெளியேறும் பகுதி இருக்கிறது . தான் விமானத்தின் பின் பகுதியில் இருந்ததாக கூறினார் .
அனைவரும் கட்டாயமாக விரைவாக வெளியேறும் பகுதி திறக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும். சில வேளைகளில் விமானம் எரியும் போது அதில் பணி புரிபவர்கள் கூட இறந்திருக்கலாம் . ஆகவே எமக்கு அதை திறக்க தெரிந்திருக்க வேண்டும் . இதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் .
நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் நமது பாதுகாப்பை மேலும் உறுதி செய்கின்றன .
கூடுதலாக விரைவாக வெளியேறும் கதவுக்கு அருகில் இருப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் மற்றும் விமானத்தில் பின்னால் இருப்பவர்கள் உயிர் பிழைக்கும் வீதம் 60 % ஆம்..
முக்கியமான தவறுகள்
விரைவான அதிர்ச்சி
அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது தான் இருப்பார்கள். சிலர் கடவுளை வணங்குவர் . கண்களை மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள் . அடுத்த படியை யோசிப்பதில்லை . இது தான் உண்மை .
பொதிகளை கை விடாமல் இருத்தல்
முக்கியமாக எம்மவர்கள் பொதிகள் மீது கவனம் செலுத்தி அதை எடுத்துக்கொண்டு செல்ல முற்படுவர். பொதிகளை விட்டு விட்டு உடனடியாக வெளியேற மட்டுமே பார்க்க வேண்டும் . எந்த நேரத்தில் வெடிக்கும் என்பது கூற முடியாது . ஆனால் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்பது நிச்சயம் .
தயவு செய்து விமான பயணத்தில் குடிக்காதீர்கள் . அது உங்கள் செயல்ப்படும் திறனை இன்னும் குறைக்கும் .
விமான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கும் போது அலட்ச்சியம்
அனைத்திற்கும் காரணம் அலச்சியம். கூடுதலாக நாம் ஒருவரும் விமானம் புறப்படும் முன் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை . காரணம் எத்தனையோ தடவை கேட்டு விட்டோம் என்ற அலட்ச்சியம் . ஆனால் சில தகவல்கள் விமானத்துக்கு விமானம் வேறு படும் எனபதே உண்மை .
பாதுகாப்பு உறையை கூடுதலாக உடனே அணிய வேண்டும் ஆனால் விமானம் விழுந்தது நீர் பரப்பாக இருந்தால் விமானத்தை விட்டு உடனே குதிக்க தேவையில்லை .
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்பது சிலருடைய கருத்து . சிலருடைய கருத்து அந்த நேரம் என்ன செய்வதென்றே தெரியாது என்பதே . நாம் அதிர்ச்சியடைவதன் மூலம் உயிர் காப்பாற்றப்படப்போவதில்லை .உயிர் பிழைக்கும் விகிதம் மனதளவில் குறைக்கப்படும் . ஆனால் மன அழுத்தத்தை எதிர் கொண்டு விரைவாக செயல்ப்பட வேண்டும் . சில திடீர் வெடிப்புகள் தவிர்க்க முடியாது .
இவற்றால் உயிர் பிழைக்கலாம் என்றில்லை . உயிர் பிழைக்கும் விகிதத்தை கூட்டலாம்.
Thanyou: http://ethamil.blogspot.com/2010/05/blog-post_24.html
Thursday, May 13, 2010
மருத்துவம்
நல்ல கொலஸ்ட்ரால்
கொழுப்பு வேறு; கொலஸ் ட்ரால் வேறு; ஆனால், கொழுப்பில் இருந்து பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது தான் கொலஸ்ட்ரால். ஓரளவு கொழுப்பு , நம் உடலுக்கு நல்லது மட்டுமல்ல; செல்கள், உறுப்புகள் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவுகிறது. அதே கொழுப்பு, அதிகரிக் கும் போது, கெட்ட கொழுப் பாக மாறுகிறது. அப்போது தான் கொலஸ்ட்ரால் என்று கணக்கிடப்படுகிறது.
இரு வகை கொழுப்பு
எல்.டி.எல்: "லோ டென் சிட்டி லிப்போப் ரோட் டீன்ஸ்` என்று அழைக்கப்படும் எல்.டி.எல்., கொலஸ்ட்ரால், மிக ஆபத்தானது. அதிக அளவில் ரத்தத்தில் சேர்ந்தால், ரத்தக்குழாய் சுவரில் படிந்து, அதை அடைக்கிறது. ரத்தக்குழாய் அடைப்புக்கு இது தான் முக்கிய காரணம்.
எச்.டி.எல்: "ஹை டென்சிட்டி லிப்போப்ரோட்டீன்` என்று அழைக்கப்படும் அதிக அடர்த்தி உள்ள கொலஸ்ட்ரால். இது உடலில் அதிகமாக சேர்ந்தாலும், கல்லீரலுக்கு போய், அங்கிருந்து கழிவாக வெளியேறி விடும்.
ட்ரைகிளிசரைட்ஸ்: இது மூன்றாவது வகை கொழுப்பு. தசைநார்களுக்கு எனர்ஜியை தரும் இது, அதிகமாகும் போது கொழுப்பாகி, ரத்தத்தில் சேர்கிறது. இதய பாதிப்பு வரும் போது, ரத்தத்தில் இதன் அளவும் சரிபார்க்கப்படுகிறது.
உணவால் தான்...
கொலஸ்ட்ரால் ஏற்பட காரணம் பல உண்டு என்றாலும், நாம் சாப்பிடும் உணவால் தான் ஏற்படுகிறது. கொழுப்பு உணவால், உடலில் கொழுப்பு அதிகமாகி, ரத்தத்தில் கொலஸ்ட்ராலாக சேர்கிறது. வயிறு வழியாக உணவு சென்றவுடன், கல்லீரலில் கொழுப்பு பிரிந்து, கொலஸ்ட்ராலாக ரத்தத்தில் சேர்கிறது.
200க்கு மேல் உஷார்
*கொலஸ்ட்ரால் எல்லாருக் கும் இருக்கும்; அது 200 க்குள் இருக் கும் வரை பிரச்னை பண்ணாது.
*ஆபத்தான அளவு என்பது 200ல் இருந்து 239 வரை. அப்போது கண்டிப்பாக விழித் துக்கொள்ள வேண்டும்.
*240 ஐ தாண்டி விட்டால், இனியும் சும்மா இருந்தால், அவ்ளோ தான். அலட்சியம், விபரீதத்துக்கு வழி வகுத்து விடும்.
*200, 240 என்றெல்லாம் சொல்லப்படுவது என்ன தெரியுமா? ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மில்லி கிராம் தான்.
*எல்.டி.எல்.,எச்.டி.எல்.,மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ் ஆகியவற்றிலும் இந்த அளவு உண்டு. எல்.டி.எல்.,130க்குள் இருக்க வேண்டும்; எச்.டி.எல்.,60 க்கு மேல் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைட்ஸ் 200 க்கு கீழ் இருக்க வேண்டும்.
பக்கவாதம் எப்படி?
இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு வருகிறது. அதுபோல, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், பக்கவாதம் ஏற்படுகிறது. உடலில் நரம்புகள் இயங்கினால் தான் கை, கால்கள் இயங்குவது, வாய் பேசுவது , நடப்பது, மடக்குவது போன்றவை செய்ய முடியும். ரத்தம் சீராக செல்லாமல் போனால், மூளைக்கும் ஆக்சிஜன், சத்துக்கள் பாதிக்கப் பட்டு விடுகிறது; அதனால், அதன் இயக்கம் தடைபடுகிறது. அதனால், பக்கவாதம் ஏற்படுகிறது.
1.A. ஆரோக்கியமான ரத்தக்குழாய் இது. உயர் அடர்த்தி வாய்ந்த எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், ரத்தக்குழாயில் சென்று, மற்ற கொலஸ்ட்ராலையும் வெளியேற்றி, கழிவாக மாற்றி விடுகிறது.
1.B.ரத்தக்குழாய் சுவரில் படிந்திருப்பது தான் கெட்ட கொலஸ்ட்ரால். இது தான் ரத்தம் செல்வதை பாதித்து, ரத்தக்கட்டியை உருவாக்குகிறது.
Thank you: http://tamilulakam.co.uk/womens/view.php?id=374