டாக்ஸ்பாரில் நேரத்திற்கு அடுத்ததாக நமது பெயர்
வந்தால் எப்படி யிருக்கும்? புதிதாக நமது கம்யூட்டரை
பார்ப்பவர்கள் வியந்து போவார்கள். அந்த இடத்தில்
நமது பெயரையோ - திருமணமாகியிருந்தால் மனைவி
பெயரையோ - திருமணமாகி குழந்தைகள் இருந்தால்
குழந்தைகள் பெயரையோ நாம் அங்கு பதியவைத்து
மற்றவர்களை ஆச்சரியப்படுத்தலாம். இனி அந்த
இடத்தில் பெயர் எப்படி வரவழைப்பது என பார்க்கலாம்.
முதலில் Start > Control Panel ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
அதில் கீழ்கண்ட வாறு செய்தி வரும். அதில் உள்ள
Date,Time , Language and Regional Options தேர்வு செய்யுங்கள்.
மீண்டும் உங்களுக்கு மேற்கண்ட வாறு காலம் தோன்றும்.
அதில் Region and Language Option -ஐ மீண்டும் தேர்வு
செய்யவும். கீழ்கண்ட காலம் ஒன்று ஓப்பன் ஆகும்.
அதில உள்ள Customise தேர்வு செய்யவும்.
தேர்வு செய்தால் Customize Regional Option என்ற காலம்
மீண்டும் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Time என்பதை
தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட காலம்
ஓப்பன் ஆகும். அதில் AM- மற்றும் PM என்று
இருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை
தட்டச்சு செய்யவும் . பின் Ok - Apply - கொடுத்து வெளி
பார்த்தால் நேரத்தின் அருகே நீங்கள் சூட்டிய பெயர்
தெரியவரும்.