Monday, November 30, 2015

மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை

மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை







மின்சார கணக்கை நாமே சோதனைசெய்யலாம் .
படத்தைச் சேர்
 பெரும்பாலும் நாம் மின்சார அலுவலர்

 ரீடிங் எடுத்து அவர் குறித்து கொடுக்கும்

 தொகையை கார்டில் குறித்து

 அதை அப்படியே மின் அலுவலகத்தில்

 சென்று பணம் கட்டி வருகிறோம். 

அந்த தொகை சரியானதா? ரீடிங் சரியா -

 மின்தொகை ரூபாய் சரியா என

 பெரும்பாலானோர் சரிபார்ப்பதில்லை.

 சரி அதை எப்படி சரிபார்ப்பது.

கீழே கொடுத்துள்ள கணக்கு அதற்கு உதவும்.

முதலில் தற்போதைய ரீடிங் அளவை

 குறித்துக்கொள்ளவும். 

அதன் கீழே முன்மாத அளவை

 குறித்துக்கொள்ளவும்.

 புதிய ரீடிங்கிலிருந்து பழைய ரீடிங் அளவை கழிக்கவும்.

உதாரணம்:-     தற்போதைய ரீடிங் 0516
                           
                           பழைய ரீடிங் 0330                                                                   
                                                         ----------
                                    ரீடிங் அளவு 186    யூனிட்கள்
                                                                    --------


 கணக்கு போட தோதாக ரவுண்ட் டாக

 மாற்ற (180யூனிட் என -கணக்கீட்டாளர்களும்

 கணக்கு போடஅப்படியே செய்வார்கள்)

180 என குறித்துக்கொள்ளுங்கள்.

1< 50 unit வரை 0.75 காசு எனில் தொகை = ரூ.37.50 



51< 100 unit வரை 0.85 காசு எனில் தொகை =ரூ.42.50



 மீதி 80 unit  வரை 1.50 காசு எனில் தொகை=   ரூ.120.00
                                                       ---------
                                          மொத்தம் ரூ.200.00

                           நிர்ணய கட்டணம் ரூ.  10.00
                                                         ----------
                                 ஆக மொத்தம் ரூ.210.00.
                                                       ----------

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குறைந்த மின்கட்டண விகிதம்
       -----------------------------------------------------------------------------------

1 முதல் 50 யூனிட் வரை       - 0.75 (பைசா)  ஒருயூனிட்டுக்கு

51 முதல் 100யூனிட் வரை    -0.85 (பைசா)   ஒருயூனிட்டுக்கு

101 முதல் 200யூனிட் வரை ரூ -1.50     ஒருயூனிட்டுக்கு

201 முதல் 601யூனிட் வரை ரூ -2.20     ஒருயூனிட்டுக்கு

601யூனிட்டுக்கு மேல்         ரூ -3.05    ஒருயூனிட்டுக்கு

                                    
                                              -------0O0-------

யப்பா எனக்கு இந்த கணக்கெல்லாம்

 போட வராது. அட போப்பா வேறுவேலை

 இல்லை என்கிறீர்களா. 

 உங்களுக்கான அட்டவணையை

 இணைத்துள்ளேன். பார்த்து

 கணக்கை தெரிந்துகொள்ளுங்கள்.

 அடுத்த முறை கணக்கீட்டாளர்கள்

 வரும் சமயம் உங்கள் கணக்கு சரியா

 என சோதனை செய்து கொள்ளுங்கள்





உங்கள் மின்கட்டண அட்டவணை கொண்டு மின்கட்டணத்தை சரிபார்க்கவும்.

இந்த அட்டவணை வீட்டு உபயோகத்திற்கானது மட்டுமே.

கம்யூட்டர் மூலம் டைப்ரேட்டிங் கற்றுக்கொள்ள:>




கம்யூட்டர் மூலம் டைப்ரேட்டிங் கற்றுக்கொள்வோம்.






மாணவர்களுக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள் 
அவர்கள் விளையாட்டிலும் கம்யூட்டர் கேம்ஸ்
ஸிலும் பொழுதை வீணாக செலவழிப்பார்கள்.
அவர்கள் விளையாடவும் செய்யனும் அதே 
சமயம் அறிவும் வளர கம்யூட்டரில் கம்யூட்டர்
மூலம் டைப்ரேட்டிங் கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.
அதற்காக டைப்ரேட்டிங் இன்ஸ்டியூட் செல்ல
வேண்டாம். வீட்டிலிருந்தே கம்யூட்டர் கற்றுக்
கொள்ளலாம். அதற்காக உள்ள கம்யூட்டர் 
கற்றுக்கொடுக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை
இத்துடன் இணைத்துள்ளேன். தேவையான 
பிடித்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து 
குழந்தைகளை டைப்ரேட்டிங் பழக சொல்லுங்கள்.

முகவரி சுட்டிகள்:-
http://www.freedownloadscenter.com

அட இதெல்லாம் எனக்கு வேண்டாம்பா. நான் வார்த்தை
யின் முதல் எழுத்தை டைப் அடித்தால் எனக்கு அது 
சம்பந்தமான அனைத்து எழுத்துக்களும் வர வேண்டும்
என விரும்புகிறிர்களா? அதற்கும் ஒரு சாப்ட்வேர் 
இருக்கு.
வீடியோவைச் சேர்அதற்கான முகவரி சுட்டி:-
அனைத்து தளங்களுக்கும் சென்று பாருங்கள்.
உங்கள்தேவையானதை பதிவிறக்கம் செய்யுங்கள்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.
thanksto:vehttp://velang.blogspot.com

இ-மெயிலில் அதிக எம்.பி.அளவுள்ள ஃபைல்களை அனுப்ப:>

-மெயிலில் அதிக எம்.பி. அளவுள்ள ஃபைல்களை அனுப்







-மெயிலில் ஃபைல்களை இணைத்து அனுப்ப அதிகபட்சமாக 20 எம்.பி தான்
அனுப்ப முடியும். ஆனால் இந்த சாப்ட்வேரில் அதிக பட்சமாக 100 எம்.பி வரை
எளிதாக அனுப்பிவைக்கலாம்.இந்த இ-மெயிலில் இலவச மாக மாதம் 500 எம்.பி
வரை பைல்களை அனுப்பி வைக்கலாம்.

பதினைந்து நாள் டிரையல் விஷனில் 3ஜி.பி. வரை பைல்களை அனுப்பலாம்.

ஒரு இ-மெயில் கணக்கில் மாதம் 500 எம்.பி.வரைதான் அனுப்ப முடியும்

என்பதால் உங்கள் தேவைக்கு ஏற்ப இரண்டு மூன்று இ-மெயில் கணக்கை

துவங்கி பைல்களை அனுப்பிவைக்கலாம்

முகவரி தளம்:-http://www.sendalong.com/index.html



இ-மெயில் அனுப்பி பாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
Thanks to: http://velang.blogspot.com

Monday, May 25, 2015

கேஸ் சிலிண்டர் விபத்து , இழப்பீடு - வழிகாட்டுதல்


கேஸ் சிலிண்டர் விபத்து , இழப்பீடு - வழிகாட்டுதல்

உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !(பாரதி தம்பி)
*********************************************************
'நாம் கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையையும் சேர்த்துதான் கட்டுகிறோம். எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இன்ஷூரன்ஸைப் பயன்படுத்தி 40 லட்சம் ரூபாய் வரையிலும் இழப்பீடு பெற முடியும். ஆனால், இந்தச் செய்தியை இன்ஷூரன்ஸ் நிறுவனமோ, கியாஸ் நிறுவனமோ மக்களுக்குச் சொல்வது இல்லை!’ இப்படி ஒரு செய்தி குபீரெனப் பரவுகிறது. அது உண்மையா? 

உண்மைதான்! ஆனால், முழு உண்மை அல்ல. எரிவாயு இணைப்பை நாம் பெறும்போதே, ஒவ்வோர் இணைப்பின் மீதும் இரண்டு வகையான இன்ஷூரன்ஸ் எடுக்கப்படுகின்றன. ஒன்று, சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் எடுப்பது; மற்றொன்று நமது கியாஸ் ஏஜென்சி எடுப்பது. இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் தொகையை, கியாஸ் ஏஜென்சிகளும் கியாஸ் நிறுவனங்களுமே செலுத்திவிடும்; வாடிக்கையாளர்களாகிய நாம் செலுத்தவேண்டியது இல்லை.

ஒருவேளை கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், இதற்கான தொகையை இன்ஷூரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் இது பொருந்தும். இதன்படி, தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரையிலும், மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரையிலும், உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக இழப்பீடு பெற முடியும். இந்த இழப்பீட்டுக்கான உச்சவரம்பு எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம், குறிப்பிட்ட ஒரு விபத்துக்கு 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இப்படி ஒரு இன்ஷூரன்ஸ் இருப்பது குறித்து, கியாஸ் ஏஜென்சிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் மக்களுக்கு எந்தத் தகவலும் சொல்வது இல்லை. இது தொடர்பான விழிப்புஉணர்வும் மக்களிடம் இல்லை. இதனால் கியாஸ் சிலிண்டர் விபத்துக்கள் எத்தனையோ நடந்திருந்தும், கடந்த 20 ஆண்டுகளில் ஒரு கிளெய்ம்கூட செய்யப்படவில்லை. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய், பிரீமியம் என்ற பெயரில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குச் செல்கிறது.



அதே நேரம், இந்த முறையில் கிளெய்ம் செய்ய வேண்டுமானால், அதற்கு பல நிபந்தனைகள் இருக்கின்றன. விபத்து ஏற்பட்டதும் உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள், சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனத்திடமும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமும் தெரிவிப்பார்கள். பிறகு, அதிகாரிகள் குழு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அதுவரையில் விபத்து நடந்ததற்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். விபத்து குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்க வேண்டும். யாருக்கேனும் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை இணைக்க வேண்டும். விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்திருந்தால், அதற்கான மருத்துவமனை/ மருந்துப் பொருட்களின் ரசீதுகளை இணைக்க வேண்டும். விபத்தின் மூலம் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும். ஆனால், இவையெல்லாம் விபத்துக்குப் பிறகான நடைமுறை.

விபத்துக்கு முன்னரே நாம் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ஏகமாக இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். அப்படி சான்று பெற்றிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. நமது பெயரில் நாம் பெற்ற கியாஸ் சிலிண்டராக இருக்க வேண்டும். அவசரத்துக்குக் கடன் வாங்கிய சிலிண்டரில் விபத்து ஏற்பட்டால், கிளெய்ம் செய்ய முடியாது. இப்படிப் பல நிபந்தனைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நிறைவேற்றி இருந்தால் மட்டுமே, விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியும்.

'ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற பொருட்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்’ என்ற முதல் இரண்டு விஷயங்களிலேயே நம் ஆட்கள் அத்தனை பேரும் ஃபெயில் ஆகிவிடுவார்கள். இத்தனை சிக்கலான நிபந்தனைகளை வைத்துக்கொண்டு, அதை மக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

'இது தொடர்பாக விளம்பரங்கள் செய்வது இல்லை என்பது உண்மைதான். அதற்காக இதை நாங்கள் மறைக்கிறோம் எனச் சொல்ல முடியாது. எல்லா விவரங்களும் எங்கள் இணையதளங்களில் வெளிப்படையாக இருக்கின்றன’ என்கிறார்கள் எரிவாயு நிறுவன ஊழியர்கள்.

கியாஸ் சிலிண்டர் விபத்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே இருக்கின்றன. சிலிண்டர்களை எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் கையாள்வது இதற்கு முக்கியக் காரணம் என்றால், காலாவதியான சிலிண்டர்கள் இன்னொரு காரணம்.

அது என்ன காலாவதியான சிலிண்டர்?

'இந்த சிலிண்டர், எரிவாயு நிரப்பும் தரத்துடன்தான் இருக்கிறது’ என, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு சிலிண்டரும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்தச் சோதனையில் சிலிண்டரில் ஏதேனும் குறை இருப்பது தெரியவந்தால், அது சரிசெய்யப்பட்டு இந்தியத் தர நிர்ணய அமைப்பு (ஙிuக்ஷீமீணீu ஷீயீ மிஸீபீவீணீஸீ ஷிtணீஸீபீணீக்ஷீபீs) சான்று அளித்த பின்னரே, மீண்டும் பயன்பாட்டுக்கு விட வேண்டும். ஒரே சிலிண்டரில் இரண்டாவது முறையாகக் குறை இருப்பது கண்டறியப்பட்டால், அது பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும்.

சிலிண்டரின் தலைப்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கின்றன அல்லவா? அதில் ஒரு கம்பியின் பக்கவாட்டில், சிலிண்டரின் எடை விவரங்கள் இருக்கும். இன்னொன்றில், காலாவதி தேதி குறித்த எண்கள், சுருக்கெழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையில் கி, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் ஙி, ஜூலை முதல் செப்டம்பர் வரை சி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் ஞி. உதாரணத்துக்கு உங்கள் சிலிண்டரில் கி–15 என எழுதப்பட்டிருந்தால், அதன் எக்ஸ்பயரி தேதி மார்ச் 2015 என அர்த்தம். இந்தத் தேதிக்குப் பிறகு சிலிண்டரைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. கியாஸ் கசிவு முதல் சிலிண்டர் வெடிப்பது வரை பல அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகம். காலாவதித் தேதியைக் கடந்து இருந்தாலோ, மிக நெருக்கத்தில் இருந்தாலோ,  அந்த சிலிண்டரை நிராகரிக்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு!

காப்பீடு பெற...

சென்னைப் புறநகர் பகுதியில் உள்ள கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ஒருவரிடம் பேசியபோது, ''கியாஸ் ஏஜென்சி தரப்பில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். கியாஸ் கம்பெனி தரப்பில் எடுக்கணீப்படும் இன்ஷூரன்ஸ் தனி. என் அனுபவத்தில் இதுவரை யாரும் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணியது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அடுப்பு, லைட்டர், டியூப் போன்றவற்றின் தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக எங்கள் பிரதிநிதிகள் சென்றால் மக்கள் யாரும் ஒத்துழைப்பதும் கிடையாது. ஒருவேளை இனிமேல் யாரேனும் இப்படி தரச் சான்றிதழ் பெற்று உரிய முறையில் பராமரித்தால், ஏதேனும் விபத்து ஏற்படும்போது இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம்'' என்றார்.

நன்றி : விகடன் செய்திகள் - 07.05.2015
http://selvampalanisamy.blogspot.in/2015/05/50.html