Thursday, October 9, 2014

மறந்த WiFi Network இன் கடவுச் சொல்லை மீட்பதற்கு!( WiFi Password Recovery)

அலுவலகம், கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச்சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த Wireless Key View என்ற மென்பொருள்.
முதலில் Wireless Key View என்ற இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். முக்கியமாக நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில் இருக்க வேண்டும்.(Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்)
Kalaivanan
.
அடுத்து உங்கள் மடிக்கணினியில் Wifi ON செய்யப்பட்டு இருக்க வேண்டும். இப்போது மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். இதனை ஓபன் செய்ததும் நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கக் கூடிய Wi-Fi இணைப்பு பற்றிய தகவல்களை இந்த மென்பொருள் தரும்.
முதலில் Network பெயர், அடுத்து அதன் Key Type, பின்னர் கடவுச்சொல்(Key, ASCII ) போன்றவை கிடைக்கும். இதன் முன்னரே நீங்கள் அந்த இணைப்பை பயன்படுத்தி இருந்திருக்க வேண்டும். மறந்து போன கடவுச் சொல்லை உங்கள் கணணியில் இருந்து இது மீட்டு தரும்.
இது நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அல்லது பள்ளியில் அல்லது கல்லூரியில் Adminவரவில்லை என்றாலோ, புதிதாக ஏதாவது இணைப்பு கொடுக்கும் பொழுதோ இந்த மென்பொருள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா, எனவே மறவாமல் இப்போதே தரவிறக்கி கொள்ளுங்கள்.





Thanks: http://www.techtamil.com/

லேப்டாப் திருடப்பட்டால்

காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம், அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள்.Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்


Posted Image

படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள்.
Laptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க
இதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.

 
Posted Image

சரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி ?
Mail & Mobile (Alert)மூலம் தகவல் அனுப்பும் வசதி:
இந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் . இதேபோல் மொபைல் எண்ணை இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும். 



Posted Imageமேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .
(Destroy Data Automatically In Case Of Theft)
இதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.

Posted Image

மேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு, உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும், ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும். சிறப்பான பாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த சிறப்பான இலவச software 
 Thanks: http://www.techtamil.com/

Monday, September 22, 2014

தவறி அனுப்பும் குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கும் வசதி கொண்ட புதிய செயலி

தவறி அனுப்பும் குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கும் வசதி கொண்ட புதிய செயலி






'இன்விஸிபிள் டெக்ஸ்ட்' (“Invisible Text”) என்ற செயலி மூலம் பயனர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை, பெறுபவர் படிக்கும் முன்னரே அழித்துவிடும் வசதியைக் கொண்டுள்ளது. அதனால் உங்கள் நண்பருக்கோ, காதலிக்கோ நீங்கள தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியைப் பற்றி இனி கவலைப்படவேண்டாம். இதில் ஒரே சிக்கல், செயலி அழிக்கும் வரை, அந்த குறுஞ்செய்தி படிக்கப்படாமல் இருக்க வேண்டும். 

இதே போல, வீடியோ மற்றும் குரல் பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பிவிட்டு, அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பெறுநர்களின் மொபைலில் இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும் டைமர் வசதியும் இதில் உள்ளது. 

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி உங்கள் குறுஞ்செய்தி மற்றும் படங்களை பெறுபவரது மொபைலிலும், 'இன்விஸிபிள் டெக்ஸ்ட்' செயலி இருந்தால்தான் இந்த அம்சம் வேலை செய்யும். 

ஃபேஸ்புக் அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம் உள்ளாகும்.






*  நீங்கள் எவ்வித நோக்கமும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா?
*  உங்களது விழிகள் திரையை விட்டு நீங்காமல் இருக்கின்றதா?

அப்படி என்றால் நீங்கள் மன அழுத்தத்தை உள்ளாகும் அபாயத்துக்கான அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் ஏற்படும் என்றும், ஃபேஸ்புக் தளத்துக்கு அடிமையாவோர், தனிமை உணர்வால் வாடும் நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் அனைவரையும் இணைக்கும் வண்ணம் காட்சியளித்தாலும், அதிக நேரம் பயன்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தரக்கூடும் . 

மூன்று கட்டமாக நடந்த இந்த ஆய்வில், முதல் கட்டமாக 123 ஜெர்மன் பேசும் ஃபேஸ்புக் வாசகர்களைக் கொண்டு ஆராய்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கில் சிறிது நேரம் செலவிட்டவுடன் அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்பட்டது. (அமேசான் மெகேனிகல் டர்க்) என்ற திட்டத்தின் மூலம் இதன் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் 263 பேர் பங்கேற்றனர். அதில் பங்கு பெற்றவர்களின் மனநிலையிலும் மாற்றம் காணப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் கடைசி கட்டமாக 101 ஃபேஸ்புக் வாசகர்களிடம் 'ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா அல்லது சோகத்தை உண்டாக்குமா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

இந்த கட்டத்திலும் 'ஃபேஸ்புக்கிலிருந்து வெளிவரும்போது தங்கள் வாழ்க்கையில் தனிமை ஏற்படுகிறது' என்று வைரல் க்ளோபல் நியூஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பிறரிடம் அதிகம் பேசாத உள்முக சிந்தனையாளர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதால் தன் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்வது சிறிதே என்றும் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தெரியவந்தது.


Thanks to : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=108597

ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா?





சுமார் 50 லட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-கிளவுட் மூலம் சேகரிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் நூற்றுக்கணக்கான அந்தரங்க படங்கள், ஹேக்கர்களால் கடந்த வாரம் இணையத்தில் கசியவிடப்பட்டது, தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில், கூகுள் கணக்குகளின் இ-மெயில் சேவையான ஜி- மெயில் வாடிக்கையாளர்களில் சுமார் 50 லட்சம் கணக்குகளின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்ட விவரங்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு புதன்கிழமை இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது.



பிட்காய்ன் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. இத்துடன் ஹேக்கர்களால் கசியவிடப்பட்ட தகவல்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பரவிய செய்தியால் ஜி-மெயில் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.



கூகுள் சேவைகளான ஜி-மெயில், யூ டியூப், ஹேங்அவுட், டிரைவ், மேப் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பயனீட்டாளர்களின் ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்கள் உபயோகப்படுத்தப்படுவதால் இணையவாசிகள் மத்தியில் இந்தச் செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், 60% கணக்குகளின் கடவு சொற்கள் மாற்றப்படாமலேயே உள்ளதாகவும், அந்த ஹேக்கிங் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.



இது குறித்து கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ' 50 லட்சம் ஜி-மெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து நாங்கள் ஆராய்ந்ததில், அவற்றில் 2% கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இவையும், மற்ற இணையதளங்களில், மெயில் விவரங்களை பகிர்வது போன்ற செயல்களால் நடக்கும் பிரச்சினைகளால் நடந்ததுதான். இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2% கணக்குகளின் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து பார்த்துவிட்டோம்.



கூகுள் சேவையில், ஹேக்கர்களை கண்டறிவதற்காக, தானியங்கி தடுப்பு அமைப்புகள் கொண்ட வழிமுறைகள் கையாளப்படுகிறது, கடவுச்சொற்கள் மற்றும் பயனர் பெயர்கள் திருடப்படுவதை இந்த தானியங்கி தடுப்பு அமைப்பு நிறுவனத்திற்கு சர்வரின் மூலம் தெரியப்படுத்தும்.



ஜி-மெயில் கணக்குகள் என்றுமே பாதுகாப்பானவை. பயனீட்டாளர்களும் தங்களது தரப்பில் கணக்குகளுக்கு பாதுகாப்பான கடவுச்சொற்களை ஏற்படுத்த வேண்டும். எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய மற்ற மெயில் விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பதிவேற்றி, தம் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் ' என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



மேலும், ஜி-மெயில் பயனாளர்கள் தங்களது இ-மெயில் கணக்கு பாதுக்காப்புடன் உள்ளதா என்று அறிந்துகொள்ள https://isleaked.com/en.php என்ற காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் லிங்க்-யையும் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதில், தங்களது ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம். 


Tanks to : http://www.dinakaran.com/News_Main_spl.asp?Id=17