Monday, November 30, 2015

வேலன்-அடோப் ரீடர் தானே படித்து காட்ட


அடோப் ரீடர் தானே படித்து காட்ட


நாம் பெரும்பாலானவர்கள் பி.டி.எப். பைல்களை

அடோப் ரீடர் மூலம் திறந்து பார்ப்போம். ஆனால் 

அந்த அடோப் ரீடரிலேயே படிக்கும் வசதி இருப்பது

பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நம்மிடம்

உள்ள கட்டுரைகள், பாடங்கள், டாக்குமென்டுகள் என

பி.டி.எப். பைல்களாக எது எது உள்ளனவோ அது

அனைத்தையும் அடோப் ரீடர் படித்துக்காட்டும்.

பள்ளி , கல்லூரி படிக்கும் மாணவர்கள் இந்த

வசதியை பயன் படுத்துவது மூலம் பாடங்கள் 

எளிதில் மனப்பாடம் ஆகும்.தூய தமிழில் பேசுவது

போல் தூய ஆங்கிலத்தில் அடோப் ரீடர் பேசுவதை

நாம் கேட்கலாம். இனிஇந்த வசதியை எப்படி

பயன்படுத்துவது என பார்க்கலாம்.

முதலில் நீங்கள் படித்துக்காட்டவேண்டிய

பைலை ஓப்பன் செய்துக்கொள்ளவும். பிறகு

அதில் view எனும் காலத்தை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட வாறு ஒரு காலம் 

தோன்றும்.

அந்த காலத்தில் கடைசியில் உள்ள Read Out Loud

ஐ செலக்ட் செய்யவும். பின்னர் வரும் உப காலத்தில்

Activate Read Out Loud  அல்லது Shift+Ctrl+Y அழுத்தவும்.

இப்போழுது உங்களுக்கு கீழ்கண்ட வாறு காலம் 

மீண்டும் திறக்கும்.



அதில் நீங்கள் தேர்வு செய்த பக்கம் மட்டும் படித்துக்

காட்ட வேண்டுமா அல்லது மொத்த பக்கங்களையும்

படித்து காட்ட வேண்டுமா என உங்கள் விருப்பத்திற்கு

ஏற்ற வாறு தேர்வு செய்யுங்கள்.



தேர்வு செய்து முடித்ததும் அடோப்ரீடர் உங்களுக்கு 

நீங்கள் தேர்வு செய்த பக்கத்தை படித்துக்காட்ட

ஆரம்பிக்கும். படிப்பதை தற்காலிகமாகநிறுத்தவோ

 அல்லது நிறந்தராமாக நிறுத்தவோ முடியும்.


அடோப் ரீடர் இருந்தும் அதில் இந்த வசதி பற்றி

தெரியாதவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
 
thanks to: ..velan.bloger.com

வேலன்-டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க

டாக்ஸ்பாரில் நேரத்திற்கு அடுத்ததாக நமது பெயர் 

வந்தால் எப்படி யிருக்கும்? புதிதாக நமது கம்யூட்டரை

பார்ப்பவர்கள் வியந்து போவார்கள். அந்த இடத்தில் 

நமது பெயரையோ - திருமணமாகியிருந்தால் மனைவி

பெயரையோ - திருமணமாகி குழந்தைகள் இருந்தால்

குழந்தைகள் பெயரையோ நாம் அங்கு பதியவைத்து

மற்றவர்களை ஆச்சரியப்படுத்தலாம். இனி அந்த 

இடத்தில் பெயர் எப்படி வரவழைப்பது என பார்க்கலாம்.

முதலில் Start > Control Panel ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

அதில் கீழ்கண்ட வாறு செய்தி வரும். அதில் உள்ள 
Date,Time , Language and Regional Options தேர்வு செய்யுங்கள்.


மீண்டும் உங்களுக்கு மேற்கண்ட வாறு காலம் தோன்றும்.

அதில் Region and Language Option -ஐ மீண்டும் தேர்வு

 செய்யவும். கீழ்கண்ட காலம் ஒன்று ஓப்பன் ஆகும்.

அதில உள்ள Customise தேர்வு செய்யவும்.
 தேர்வு செய்தால் Customize Regional Option என்ற காலம்

மீண்டும் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Time என்பதை

தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட காலம் 

ஓப்பன் ஆகும். அதில் AM- மற்றும் PM என்று 

இருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை 

தட்டச்சு செய்யவும் . பின் Ok - Apply - கொடுத்து வெளி

யேறவும்.
இப்போழுது நீங்கள் டாக்ஸ்பாரில் உள்ள கடிகாரத்தை

பார்த்தால் நேரத்தின் அருகே நீங்கள்  சூட்டிய பெயர்

தெரியவரும்.

நமது கம்யூட்டரில் விண்வெளி




குழந்தைகளுக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள்


.அவர்களுக்கு விளையாட்டாகவும் இருக்கனும்


அறிவும் வளர உபயோகமான சாப்ட்வேர் இது.


அவர்களுடன் நீங்களும் விண்வெளியை கண்டு களிக்கலாம்.



வானத்தில் உள்ள நட்சத்திரங்கள். கோள்கள் போன்றவற்றை இந்த


சாப்ட்வேர் மூலம் கண்டு மகிழலாம். Open source software ஆன இதை பயன்படுத்தி


கோள்கள்,விண்மீன்களை நமது கம்யூட்டரில் வரவழைக்கலாம்.



இந்த சாப்ட்வேரில் novigation>go to optect என்ற மெனுவை கிளிக் செய்தால்


கிடைக்கும் டயலாக் பாக்ஸில் நீங்க காண விரும்பும் கோளின் பெயரை டைப்


செய்து goto என்ற பட்டனை அழுத்துங்கள். நீங்கள் விரும்பிள கோள் திரையில்


தெரியும். அதை சிறிதாக்கலாம்,சுழற்றலாம், பெரியதாக்கி பார்க்கலாம். அதைப்போல்


விண்வெளி ஓடத்தை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு சென்று அவற்றை


பார்ககலாம்.



முகவரி தளம்:- http://www.shatters.net

மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை

மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை







மின்சார கணக்கை நாமே சோதனைசெய்யலாம் .
படத்தைச் சேர்
 பெரும்பாலும் நாம் மின்சார அலுவலர்

 ரீடிங் எடுத்து அவர் குறித்து கொடுக்கும்

 தொகையை கார்டில் குறித்து

 அதை அப்படியே மின் அலுவலகத்தில்

 சென்று பணம் கட்டி வருகிறோம். 

அந்த தொகை சரியானதா? ரீடிங் சரியா -

 மின்தொகை ரூபாய் சரியா என

 பெரும்பாலானோர் சரிபார்ப்பதில்லை.

 சரி அதை எப்படி சரிபார்ப்பது.

கீழே கொடுத்துள்ள கணக்கு அதற்கு உதவும்.

முதலில் தற்போதைய ரீடிங் அளவை

 குறித்துக்கொள்ளவும். 

அதன் கீழே முன்மாத அளவை

 குறித்துக்கொள்ளவும்.

 புதிய ரீடிங்கிலிருந்து பழைய ரீடிங் அளவை கழிக்கவும்.

உதாரணம்:-     தற்போதைய ரீடிங் 0516
                           
                           பழைய ரீடிங் 0330                                                                   
                                                         ----------
                                    ரீடிங் அளவு 186    யூனிட்கள்
                                                                    --------


 கணக்கு போட தோதாக ரவுண்ட் டாக

 மாற்ற (180யூனிட் என -கணக்கீட்டாளர்களும்

 கணக்கு போடஅப்படியே செய்வார்கள்)

180 என குறித்துக்கொள்ளுங்கள்.

1< 50 unit வரை 0.75 காசு எனில் தொகை = ரூ.37.50 



51< 100 unit வரை 0.85 காசு எனில் தொகை =ரூ.42.50



 மீதி 80 unit  வரை 1.50 காசு எனில் தொகை=   ரூ.120.00
                                                       ---------
                                          மொத்தம் ரூ.200.00

                           நிர்ணய கட்டணம் ரூ.  10.00
                                                         ----------
                                 ஆக மொத்தம் ரூ.210.00.
                                                       ----------

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குறைந்த மின்கட்டண விகிதம்
       -----------------------------------------------------------------------------------

1 முதல் 50 யூனிட் வரை       - 0.75 (பைசா)  ஒருயூனிட்டுக்கு

51 முதல் 100யூனிட் வரை    -0.85 (பைசா)   ஒருயூனிட்டுக்கு

101 முதல் 200யூனிட் வரை ரூ -1.50     ஒருயூனிட்டுக்கு

201 முதல் 601யூனிட் வரை ரூ -2.20     ஒருயூனிட்டுக்கு

601யூனிட்டுக்கு மேல்         ரூ -3.05    ஒருயூனிட்டுக்கு

                                    
                                              -------0O0-------

யப்பா எனக்கு இந்த கணக்கெல்லாம்

 போட வராது. அட போப்பா வேறுவேலை

 இல்லை என்கிறீர்களா. 

 உங்களுக்கான அட்டவணையை

 இணைத்துள்ளேன். பார்த்து

 கணக்கை தெரிந்துகொள்ளுங்கள்.

 அடுத்த முறை கணக்கீட்டாளர்கள்

 வரும் சமயம் உங்கள் கணக்கு சரியா

 என சோதனை செய்து கொள்ளுங்கள்





உங்கள் மின்கட்டண அட்டவணை கொண்டு மின்கட்டணத்தை சரிபார்க்கவும்.

இந்த அட்டவணை வீட்டு உபயோகத்திற்கானது மட்டுமே.

கம்யூட்டர் மூலம் டைப்ரேட்டிங் கற்றுக்கொள்ள:>




கம்யூட்டர் மூலம் டைப்ரேட்டிங் கற்றுக்கொள்வோம்.






மாணவர்களுக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள் 
அவர்கள் விளையாட்டிலும் கம்யூட்டர் கேம்ஸ்
ஸிலும் பொழுதை வீணாக செலவழிப்பார்கள்.
அவர்கள் விளையாடவும் செய்யனும் அதே 
சமயம் அறிவும் வளர கம்யூட்டரில் கம்யூட்டர்
மூலம் டைப்ரேட்டிங் கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.
அதற்காக டைப்ரேட்டிங் இன்ஸ்டியூட் செல்ல
வேண்டாம். வீட்டிலிருந்தே கம்யூட்டர் கற்றுக்
கொள்ளலாம். அதற்காக உள்ள கம்யூட்டர் 
கற்றுக்கொடுக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை
இத்துடன் இணைத்துள்ளேன். தேவையான 
பிடித்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து 
குழந்தைகளை டைப்ரேட்டிங் பழக சொல்லுங்கள்.

முகவரி சுட்டிகள்:-
http://www.freedownloadscenter.com

அட இதெல்லாம் எனக்கு வேண்டாம்பா. நான் வார்த்தை
யின் முதல் எழுத்தை டைப் அடித்தால் எனக்கு அது 
சம்பந்தமான அனைத்து எழுத்துக்களும் வர வேண்டும்
என விரும்புகிறிர்களா? அதற்கும் ஒரு சாப்ட்வேர் 
இருக்கு.
வீடியோவைச் சேர்அதற்கான முகவரி சுட்டி:-
அனைத்து தளங்களுக்கும் சென்று பாருங்கள்.
உங்கள்தேவையானதை பதிவிறக்கம் செய்யுங்கள்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.
thanksto:vehttp://velang.blogspot.com