Friday, December 2, 2011
முல்லைப் பெரியாறு: முதல்வருக்கு பிரதமர் கடிதம்
First Published : 02 Dec 2011 12:41:26 AM IST
புது
தில்லி, டிச. 1: "முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்களிடையே தேவையற்ற
பீதியை உருவாக்கும் வகையில் நடந்து கொள்வதும் பேசுவதும் தவிர்க்கப்பட
வேண்டும்' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங்
கடிதம் எழுதியுள்ளார்.இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக
இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வைக் காண முடியும் என்றும் தனது
கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.முல்லைப் பெரியாறு
விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
மக்களிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று
கேரள மாநில அரசுக்கு அறிவுறுத்துமாறு அதில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் வியாழக்கிழமை கடிதம்
எழுதியிருக்கிறார்.அவரது கடித விவரம்: நீங்கள் கடிதத்தில்
குறிப்பிட்டிருந்த அம்சங்களைக் கவனத்தில் கொண்டிருக்கிறேன்.
அதேபோல் கேரள
அமைச்சர்கள் குழு என்னிடம் எழுப்பிய கவலைகளையும் கேட்டுக்கொண்டேன்.முல்லைப்
பெரியாறு விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள அதிகாரமளிக்கப்பட்ட
குழுவின் பரிசீலனையில் உள்ளதை கேரள அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டினேன்.இந்த விவகாரத்தில் மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்கும் வகையில் எதுவும் பேசுவதோ செய்வதோ கூடாது என்று கருதுகிறேன்.இரு
மாநிலங்களுக்கு இடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தி, பேச்சுகள் மூலமாக இரு
தரப்பும் ஏற்றுக் கொள்ளும் சுமுகத்தீர்வை எட்ட முடியும் என்கிற நம்பிக்கை
எனக்குஇருக்கிறது.இதற்காக, நியாயமான கவலைகளைப் போக்கும் வகையில் இரு
மாநிலங்களின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதற்கு
ஏற்பாடு செய்யுமாறு நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்
என்று தனது கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப்
பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 26 முறை நில
அதிர்வுகள் ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் அணை உடையும் அபாயம் இருப்பதாகவும்
கேரள தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அணை உடைந்தால் தாழ்வான பகுதியில் உள்ள
லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கேரளம் கூறுகிறது. பிரதமருக்கு
எழுதிய கடிதத்தில் கேரளத்தின் இந்தக் கருத்துக்கு ஜெயலலிதா மறுப்புத்
தெரிவித்திருந்தார். புதிதாகக் கட்டப்பட்டதைப் போன்று, முல்லைப் பெரியாறு
அணை வலுவாக இருப்பதாகவும் தமிழக எல்லையில் பொது அமைதிக்கும் இயல்பு
வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் கேரளத்தினர் நடந்து கொள்வதைத்
தடுக்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார்.
Thanks :http://www.dinamani.com/
Subscribe to:
Posts (Atom)